ஓட்டப்பிடாரம் அருகே 73 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் - சண்முகையா எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாப்பிள்ளையூரணி ஊராட்சி வி.வி.டி. நினைவு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- இதில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 73 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
தூத்துக்குடி:
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி வி.வி.டி. நினைவு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவரும், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கனகரத்திமணி வரவேற்று பேசினார்.
இதில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 73 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், முத்துமாலை, மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், ஊராட்சி உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், இளைஞர் அணி ராஜேந்திரன், பாரி, கிளைச்செயலாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஆனந்தகுமார் உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் மேரிகீதா நன்றி கூறினார்.