வாசுதேவநல்லூர் அருகே மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
- வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெல்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ -மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெல்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ -மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் இப்பள்ளியின் சார்பாக வைக்கப்பட்ட அடிப்படை கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நெல்கட்டும்செவல் ஒன்றிய கவுன்சிலர் விமலா மகேந்திரன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் ஸ்டாலின், பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி, அரசு ஒப்பந்ததாரர் பூசைத்துரை, உள்ளார் மணிகண்டன், விக்கி, தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.