குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வக்கீல்கள் அமைப்பு தொடக்கம்
- காணொலிக்காட்சி மூலமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா தொடங்கி வைத்தார்.
- வழக்கறிஞர்களாக நடராஜன், லார்டு இங்கர்சல், கவுசல்யா, சந்தியா ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர் :
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவால் திருப்பூர் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள கோர்ட்டு வளாகங்களில் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இருந்து காணொலிக்காட்சி மூலமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜா தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மையத்தில் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி வழக்கறிஞர்கள் அமைப்பு அலுவலகத்தை, முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு திறந்து வைத்தார்.
இந்த அமைப்புக்கான வழக்கறிஞர்களாக நடராஜன், லார்டு இங்கர்சல், கவுசல்யா, சந்தியா ஆகியோர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, மாவட்ட குடும்ப நல நீதிபதி சுகந்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லதுரை, கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, நீதித்துறை நடுவர்கள் பழனிகுமார், முருகேசன், கார்த்திகேயன், ரஞ்சித்குமார், ஆதியான், திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் வக்கீல்கள் பழனிசாமி, சண்முகவடிவேல், பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.