புதியம்புத்தூரில் 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
- இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணம் நடத்தப்படுகிறது
- மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.
புதியம்புத்தூர்:
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் குலசேகரநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களில் 7 ஜோடி களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் புதியம்புத்தூர் குலசேகரநாதர் கோவிலில் ஒரு ஜோடிக்கு திருமணம் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமையிலும், ஓட்டப்பிடாரம் சரக ஆய்வாளர் முப்பிடாதி என்ற திவ்யா முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை திருமாங்கல்யம் 4 கிராம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது.