உள்ளூர் செய்திகள்

ஆலங்குளம் ஒன்றியத்தில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் -24-ந் தேதி நடக்கிறது

Published On 2023-01-22 07:27 GMT   |   Update On 2023-01-22 07:27 GMT
  • ஆலங்குளம் ஒன்றியத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 24 -ந்தேதி நடைபெற உள்ளது.
  • பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஆ. மருதப்பபுரம் கிராமத்தில் நெல்லை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பொன்னுவேல் வழிகாட்டுதலின் படி இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 24 -ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. முகாமினை ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து நெட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ரேபிஸ் எனப்படும் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி, ஆலங்குளம் ஒன்றிய கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News