அஞ்செட்டியில் புதிய மாணவிகள் விடுதி
- அரசு சார்பில் மாணவிகள் விடுதி தொடங்க அரசு உத்தரவிடப்பட்டது.
- கழிவறை வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்து மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி சுற்று வட்டார பகுதிகளில் பள்ளி இடை நின்றலை தடுக்கவும், தொடர்ந்து உயர்நிலை, மேல்நிலை கல்வி கற்கவும், குழந்தை திருமணம் தடுக்கவும், அரசு சார்பில் மாணவிகள் விடுதி தொடங்க அரசு உத்தரவிடப்பட்டது.
இந்த விடுதியில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு வரை 50 மாணவிகள் தங்கி கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகள் விடுதியை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாணவிகள் தங்கும் விடுதியில் அறைகளையும், பாதுகாப்பு மற்றும் கழிவறை வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்து மாணவிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் வடிவேல், தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சீனிவாசன், நாகராஜ், தேன்கனிக்கோட்டை மாவட்ட துணை ஆய்வாளர் சுரேஷ்பாபு ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், சர்தார், சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.