உள்ளூர் செய்திகள்
தருமபுரி நகராட்சியில் இருந்து லாரிகள் மூலம், 16 டன் மக்காத குப்பை அனுப்பி வைப்பு
- நகராட்சியில் உள்ள நான்கு நுண்ணுர கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்படுகிறது.
- 160 டன் மக்காத குப்பைகள், உடுமலைப்பேட்டை பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்து
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில், 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக, வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு, அலுவலங்கள் ஆகியவற்றில் இருந்து நகராட்சி துாய்மை பணியாளர்கள் மூலம் மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
இவை, தருமபுரி நகராட்சியில் உள்ள நான்கு நுண்ணுர கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்படுகிறது.
மக்காதா குப்பைகளை பிரித்து, உடுமலைப்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை தருமபுரி நகராட்சியில் இருந்து, 160 டன் மக்காத குப்பைகள், உடுமலைப்பேட்டை பிளாஸ்டிக் கழிவு நீக்கும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்து. நேற்று, இரு லாரிகள் மூலம், 16 டன் மக்காத குப்பை, இங்கு, தருமபுரி நகராட்சி கமிஷனர் சித்ரா மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டது.