உள்ளூர் செய்திகள்
கதிர்காம பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா
- ஐப்பசி மாத கந்த சஷ்டி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
- முருகப் பெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்காம பால தண்டாயுதபாணி ஆலயத்தில் ஐப்பசி மாத கந்த சஷ்டி உற்சவம் வருடாவருடம் நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இவ்ஆண்டு 6 நாள் உற்சவம் கடந்த 13ம் தேதி தொடங்கியது, தினந் தோறும் மாலை சிறப்பு யாகமும் அதனைத் தொடர்ந்து பால், தயிர், சந்தனம் தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் மகா தீபாரதனை காட்டப்படும்.
இதுபோல் இன்று முருகப் பெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான முருக கடவுள் சூரனை வதம் செய்த சூரசம்ஹாரம் விழா நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.