- காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் கோவிலில் மத நல்லிணக்க விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
- ஊர்வலமானது 5 கி.மீ. தூரம் சென்று ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் உள்ள காசிவிஸ்வநாத திருசிற்றம்பல விநாயகர் கோவிலில் மத நல்லிணக்க விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு கோவிலில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் உள்ளிட்ட மும்மதத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வேதார ண்யம் நிலவள வங்கி தலைவர் பிரபு, அகரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் விவேக் வெங்கட்ராமன், சமூக ஆர்வலர்கள் விஜயபாலன், விஜயராமன் சேட்டாபாய், வெங்கட் மற்றும் காங்கிரஸ் கட்சி வர்த்தக பிரிவு அப்சல்உசேன், முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் வைரம், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமம் கோவிந்தராஜ், நகர காங்கிரஸ் தலைவர் அர்ஜூனன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் போஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
ஊர்வலமானது 5 கி.மீ. தூரம் சென்று மருதவம்புலம் ஏரியில் விஜர்சனம் செய்யப்பட்டது.
இதேபோல், தோப்புத்துறை, ஆயக்காரன்புலம், ஆதனூர், நெய்விளக்கு, கரியாபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.