சொரக்கல்பட்டில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்: அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
- ஆங்காங்கே தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில் துப்புரவு ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
- துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் தினந்தோறும் குப்பைகள் அகற்றப்படுகிறது. இவைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என 3 இடங்களில் தரம் பிரிக்கின்றனர். கடலூர் மாநகராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததால் இவைகளை எங்கே கொட்டுவது என்று தெரியாமல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால்் ஆங்காங்கே தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற முடியாத நிலையில் துப்புரவு ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.
இதன் காரணமாக கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கடலூர் மஞ்சக்குப்பம் சொரக்கல்பட்டு சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுகி்றது. இதனை நாய், பன்றிகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இவைகளை அகற்றி அப்பகுதி மக்களின் நலன்காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.