உள்ளூர் செய்திகள் (District)

தொடர்ந்து உயர்ந்து வரும் பூண்டு விலை

Published On 2023-11-30 10:08 GMT   |   Update On 2023-11-30 10:08 GMT
  • தருமபுரியில் தொடர்ந்து பூண்டு விலை உயர்ந்து வருகிறது
  • உழவர் சந்தையில் கிலோ பூண்டு ரூ.238-க்கும், வெளிமார்க்கெட்டில் ரூ.250 -க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் உள்பட தென்னிந்தியாவில், பூண்டு குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பூண்டு விவசாயம் செய்யப்படுகிறது.

அந்த மாநிலங்களில் பூண்டு ஒரு பணப்பயிராகும். இதனால் அங்கு சாகுபடி செய்யப்படும் பூண்டு நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது. பூண்டு மருந்தாகவும், வாசனை பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டில் ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது. பூண்டில் அதிகப்படியான வைட்டமின் சத்துக்களும், தாதுக்களும் மருத்துவ குணம் நிறைந்திருப்பதால் சமையலுக்கு முக்கிய உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

தருமபுரி காய்கறி மார்க்கெட்டிற்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு நாட்டு பூண்டு ரூ.180 க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய பூண்டு ரூ. 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. பல் பூண்டு ரூ 160 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இரண்டு மாதத்தி ற்கு மேலாக பூண்டு விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

வரத்து குறைவால் தருமபுரி உழவர் சந்தையில் கிலோ பூண்டு ரூ.238-க்கும், வெளிமார்க்கெட்டில் ரூ.250 -க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது.

உச்சத்தைத் தொட்டு வரும் பூண்டு விலையை தமிழக அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், இல்ல த்தரசிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News