கள்ளக்குறிச்சியில் அரசு பஸ் களின் கண்ணாடி உடைப்பு: 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்றஇரவு2 அரசு பஸ்கள் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார்.
- அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் 2 அரசு பஸ்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று இரவு சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ஒரு அரசு பஸ்சும், கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்தூர் செல்வதற்காக ஒரு பஸ்சும் நின்று கொண்டி ருந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பஸ்களின் கண்ணாடி மீது கல் வீசினார். இதனால் 2 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படை த்தனர்
. விசாரணையில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என்பதும், மது போதையில் பஸ்சின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததும் தெரிய வந்தது. அவரை இன்ஸ்பெக்டர் சத்திய சீலன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அரசு பஸ்சின் கண்ணா டியை உடைத்ததால் அதில் வந்த பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.