உள்ளூர் செய்திகள்

செஞ்சி வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகளை படத்தில் காணலாம்.

செஞ்சி வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

Published On 2022-10-21 07:32 GMT   |   Update On 2022-10-21 07:32 GMT
  • செஞ்சி வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
  • வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கி ழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் ஆட்டு சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் பெரும்பாலும் விவசாய நிலங்களிலும், மலைப்பகுதி யிலும் மேய்க்கப்பட்டு வளர்க்கப்படுவதால் செஞ்சி பகுதியில் உள்ள ஆடுகளை வாங்க தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், ஆம்பூர், வேலூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரி கள் ஆடுகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்வது வழக்கம்.

வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று நடை பெற்ற வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தைக்கு விவசாயி கள் மற்றும் ஆடுகளை வளர்ப்பவர்களும் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த னர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் ரூ. 5 கோடி வரை விற்பனை அமோகமாக நடைப்பெற்றது. சுமார் 4 மணி நேரத்திலேயே ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகளும் ஆடு வளர்ப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்த னர்.

Tags:    

Similar News