செஞ்சி அருகே இன்று காலை அரசு பஸ்-லாரி மோதி விபத்து: பயணிகள் காயம்
- இந்த விபத்தில் லாரி சாலை அருகே உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் சென்றது. இந்த பஸ் இன்று காலை செஞ்சி ஆலம்பூண்டி அருகே தாங்கள் கரை பகுதியில் வந்தது. அப்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும், லாரியும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சாலை அருகே உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து லாரியின் முன்பகுதி சேதம் அடைந்தது. லாரி டிரை வர் முருகன் லாரியில் சிக்கிக்கொண்டு படுகாயம் அடைந்தார்.
மேலும் அரசு பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர். மேலும் 7 பயணிகள் படு காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு லாரி இடுபாடுகளுக்குள் சிக்கிய லாரி டிரைவர் முருகனை அரை மணி நேரம் போராடி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த பயணிகளை போலீசார் மீட்டு செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நட்ததி வருகின்றனர்.