உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-06-07 09:32 GMT   |   Update On 2023-06-07 09:32 GMT
  • மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தருமபுரி,

தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் இளவேனில், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் கல்பனா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் மகேஸ்வரி, தமிழ்நாடு ஜாக்டோ- ஜியோ மாவட்ட நிதிகாப்பாளர் புகழேந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகாருக்குள்ளான எம்.பி. மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News