உள்ளூர் செய்திகள்

கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ள அரசின் இலவச சைக்கிள்களை படத்தில் காணலாம்.

கடத்தூர் அரசு பள்ளியில் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ள அரசின் விலையில்லா சைக்கிள்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

Published On 2023-07-25 09:37 GMT   |   Update On 2023-07-25 09:37 GMT
  • கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
  • சைக்கிள்களின் டயர், டியூப், சீட் கவர் ஆகியவை சேதமடையும் நிலை உருவாகி வருகிறது.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்கள் சுமார் 500 பேருக்கு வழங்க அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச சைக்கிள்கள் பாதுகாப்பாக வைக்காமல் திறந்தவெளி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

இதனால் சைக்கிள்களின் டயர், டியூப், சீட் கவர் ஆகியவை சேதமடையும் நிலை உருவாகி வருகிறது. தமிழக அரசால்பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களின் பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் வரும் வகையில் அரசு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி வருகிறது.

அவர்களின் நலனில் அக்கறை கொண்டு வழங்கப்படும் இந்த சைக்கிள்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் முன்பாகவே பழுதடையும் நிலை உருவாகி வருகிறது.

பல ஊர்களில் மாணவர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சைக்கிள்கள் ஓட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் சைக்கிள் பெற்றவர்கள் அந்த சைக்கிள்களை தூக்கி சென்று கடைகளில் கொடுத்து பல நூறு ரூபாய் செலவு செய்து சீராக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்த பள்ளியில் உள்ள சைக்கிள்கள் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News