சின்னசேலம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ் சிறைபிடிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
- பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
- கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டனந்தல் என்ற கிராமத்தில் கடந்த 10 தினங்களாக குடிநீர் முறை யாக வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை காட்டணந்தல் கிராம மக்கள் தங்கள் ஊரில் கள்ளக்குறிச்சியிலிருந்து ஈரியூர் கிராமம் செல்லக் கூடிய அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு எழுந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பழனி வேல், ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ஆறுமுகம், கிராம ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி, மற்றும் சின்ன சேலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என உறுதி அளித்தனர். பின்னர் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் காட்டனந்தல் கிராமத்தில் இன்று பரபரப்பு காணப்பட்டது.