கடையநல்லூர் அரபிக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி யில் 44-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
- கல்லூரியின் துணை முதல்வர் எம்.ஏ. முகம்மது இக்பால் ஆலிம் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக் கல்லூரி யில் 44-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரியின் நிர்வாகக்குழுத் தலைவர் பத்ஹீர் ரப்பானி தலைமை தாங்கினார். ஈரோடு முகம்மது ஹஸன் அலி, தென்காசி மாவட்ட ஜக்கிய ஜமாஅத் தலைவர் வி.டி.எஸ்.ஆர் முகம்மது இஸ்மாயில், கயத்தாறு பி.எச். சுல்தான், கடையநல்லூர் தொழில் அதிபர்கள் ஏ.ஐ.கே.அமானுல்லா, கே.நயினா முகம்மது, கே.ஏ.ஜாபர் சாதிக், எஸ்.மக்தும், இப்ராஹிம். ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கல்லூரியின் முதல்வரும், தென்காசி மாவட்ட அரசு ஹாஜியுமான முஹ்யித்தீன் ஹஜரத் வரவேற்று பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ. எம்.முகம்மது அபுபக்கர், கீழக்கரை சீனாதானா செய்யிது அப்துல் காதிர், சென்னை குரோம்பேட்டை காயிதேமில்லத் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் என்.முகம்மது காசிம், நெல்லை ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.கே.எம். முஹம்மது ஷாபி, சென்னை எஸ்.முகம்மது ரபீக் பேராசிரியர் ப.அ.முகம்மது இக்பால், தென்காசி ஹாஜி முஸ்தபா குருப்ஸ் எஸ்.எம். கமால் முகைதீன் ஆகியோர் பேசினார்கள்.
சென்னை சுன்னத் ஜமாஅத் பேரியக்க தலைவர் டாக்டர் எஸ்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி சிறப்புரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் எம்.ஏ. முகம்மது இக்பால் ஆலிம் 30 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் நெல்லை மஜீத் மாவட்ட பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹீம் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல்வகாப், அச்சன்புதூர் அக்பர்அலி முகைதீன் பள்ளி இமாம் இப்ராஹிம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.