பாலம் சேவை நிறுவனத்திற்கு பசுமை சாம்பியன் விருது- கலெக்டர் வழங்கினார்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கு விருது.
- மக்கும் குப்பைகளை நகராட்சியுடன் இணைந்து மக்கிய உரமாக மாற்றி வழங்கும் நிகழ்ச்சி.
திருத்துறைப்பூண்டி:
தமிழக அரசு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று பசுமை சாம்பியன் விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை நகராட்சியுடன் இணைந்து மக்கிய உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கும் பணியை 5 வருடமாக சிறப்பாக செய்து சுற்றுச்சூழலை பாதுகாத்து வரும் பாலம் சேவை நிறுவனத்தின் இந்த பணியை பாராட்டி 2022- 23-ம் ஆண்டுக்கான பசுமை சாம்பியன் விருதை பாலம் சேவை நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதற்கான சான்றிதழை திருவாரூர் மாவட்ட கலெக்டர் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமாரிடம் வழங்கினார்.