வாலிபர் கொலையில் தொடர்புடைய 10 பேருக்கு குண்டாஸ்
- சாப்பிட்டுவிட்டு செல்லும்போது ஆலத்துரை சேர்ந்தவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
- மங்களூரை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஆலத்தூர் வீரனார் கோவிலில் கடந்த ஜூலை மாதம் கிடாவெட்டி மனை போடும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் விருந்து சாப்பிட்டுவிட்டு செல்லும்போது அவர்களுக்கும் ஆலத்துரை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது மங்களூரை சேர்ந்த கார்த்தி என்ற வாலிபரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆலத்தூர் அண்ணாநகரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 34). மணிகண்டன் (22), தேவேந்திரன் (32), கருப்பையன் (19), ராஜதுரை (27), சுரேஷ் (21), சத்தியராஜ் (28), வீரக்குமார் (25), செல்வா என்ற செல்வராஜ் (27), பாரதி (19) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இவர்கள் 10 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் 10 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.