உள்ளூர் செய்திகள்

புதிய தேர் வெள்ளோட்ட விழாவில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.

80 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது; சுந்தரேசுவரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

Published On 2023-03-28 09:35 GMT   |   Update On 2023-03-28 09:35 GMT
  • நிதியுத வியுடன் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக தேர் செய்யப்பட்டது.
  • 14அடி அகலம் , 12 அடி உயரம், 4 இரும்பு சக்கரம் மற்றும் இரும்பு அச்சுடன் பொருத்தப்பட்டது.

பட்டீஸ்வரம்:

கும்பகோணம் கொர நாட்டுக் கருப்பூரில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்பிகை சமேத சுந்தரேசுவரசுவாமி கோவிலில் சுமார் 80 ஆண்டுகளாக சித்திரை பவுர்ணமி பிரம்மோற்சவ விழா நடைபெறாமல் இருந்தது.

இவ்விழா பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று சித்திரை பவுர்ணமி பிரம்மோற்சவ 9-ம் திருநாள் விழாவில் சுவாமி தேரில் எழுந்தருளி வீதியுலா வருவதற்கு புதியதாக மரத்தேர் செய்ய இந்து சமய அறநிலைய துறை அனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து சென்னை மகாலெட்சுமி சுப்ரமணியன் நிதியுத வியுடன் ரூ.50 லட்சம் மதிப்பில் புதியதாகதேர் செய்யப்பட்டது. 14அடி அகலம் , 12 அடி உயரம், 4 இரும்பு சக்கரம் மற்றும் இரும்பு அச்சுடன் பொருத்தப்பட்ட இத்தேரின் எடை சுமார் 24 டன் ஆகும்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைமிகு புராண வரலாற்று சிறப்புக்களை எடுத்துரைக்கும் மரச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் புனித நீர் உள்ள கடம் புறப்பாடும் அதனை தொடர்ந்து ரத பிரதிஷ்டையும் புதிய தேர் வெள்ளோட்டமும் நடைபெற்றது.

கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் வடம் பிடித்து ஓம் நமச்சிவாய என்ற கோசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் வெங்கட சுப்ரமணியன், செயல் அலுவலர் கணேஷ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News