உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் உற்சாகத்துடன் நடனமாடிய குழந்தைகள்.

தஞ்சையில் இன்று ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

Published On 2023-09-24 10:15 GMT   |   Update On 2023-09-24 10:15 GMT
  • அடுத்த மாதம் 8-ந் தேதி தஞ்சை அண்ணா சாலையில் இருந்து ஆத்துப்பாலம் வரை இந்த ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடை பெறும்.
  • அனைவரும் சமமாக ஒன்று கூடி மகிழ்ச்சியாக சத்தமிட்டு ஆடிப்பாடி கொண்டாடினர்.

தஞ்சாவூர்:

தினமும் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் மக்களுக்கு மன மகிழ்ச்சி மற்றும் புத்துணர்வு அளிக்கும் விதமாக வயது வரம்பின்றியும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் வகையில் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், உதகை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற மனமகிழ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தஞ்சை மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியா கவும் கொண்டாடும் வகையில் ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தஞ்சாவூர் மாநகரில் முதல் முறையாக ஹேப்பி சன் ஸ்ட்ரீட் இன்று காலை நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சி, மானசா டான்ஸ் ஸ்டூடியோ நடத்திய ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய கோர்ட் ரோட்டில் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

மானசா டான்ஸ் ஸ்டூடியோ இயக்குனர் தனலட்சுமி ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் இசைக்கருவிகள் இசைத்தும், கிரிக்கெட் விளையாடினார்.

இதில் தஞ்சாவூர் மாநகரில் உள்ள மாணவ- மாணவிகள், பெண்கள், குழந்தைகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வயது வரம்பு இல்லாமல் அனைவரும் சமமாக ஒன்று கூடி மகிழ்ச்சியாக சத்தமிட்டு ஆடி ,பாடி கொண்டாடினர்.

இதில் பிரபல நடிகர்கள் போல் மிமிக்ரி செய்தல், சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடுதல், பாடல்கள் பாடல்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடந்தது.

அனைவருக்கும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

இதேபோல் பாரம்பரிய விளையாட்டுகளும் நடத்தப்ப ட்டது.காலை 6 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியானது 9 மணி வரை நடைபெற்றது.

இனி அடுத்த மாதம் 8-ம் தேதி தஞ்சை அண்ணா சாலையில் இருந்து ஆத்துப்பா லம் வரை இந்த ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடை பெறும் என்று மேயர் சண். ராமநாதன் அறிவித்தார்.

இன்று நடந்த முடிந்த ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்று கலந்து கொண்டவர்கள் உற்சாகத்துடன் கூறினர்.

இந்த நிகழ்ச்சியை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்பட பலர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News