தேனி மாவட்டத்தில் தொடரும் கன மழை: மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
- தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
- பெரியாறு, வைகை, மஞ்சளாறு, சோத்து ப்பாறை, சண்மு காநதி அணை உள்ளி ட்ட அணை களுக்கும், குளங்கள், கண்மா ய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளான பெரியாறு, வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணை உள்ளிட்ட அணைகளுக்கும், குளங்கள், கண்மாய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 122.75 அடியாக உள்ளது. நேற்று 1157 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2166 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3176 மி.கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரே ட்டர்கள் இயக்கப்பட்டு 90 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 54.04 அடியாக உள்ளது. நேற்று 884 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1567 கனஅடியாக அதிகரித்து ள்ளது. அணையில் இருந்து 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2565 மி.கன அடியாக உள்ளது.
தேவதானப்பட்டி அருகில் உள்ள 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று காலை 54.95 அடியாக உயர்ந்தது. ஏற்கனவே 2ம் கட்ட வெள்ள அபாய எச்ரிக்கை விடப்பட்ட நிலையில் இன்று காைல முதல் 3ம் கட்ட வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது அணைக்கு 47 கனஅடி நீர் வருகிறது. நீர் இருப்பு 434.30 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்ட ங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவி டப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை முதல் அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் தேவதானப்பட்டி, ஜி.கல்லு ப்பட்டி, தும்மலப்பட்டி, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும் பழைய ஆயக்கட்டு பகுதியில் 3386 ஏக்கர் நிலங்களுக்கு 60 கன அடி திறக்கப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா மற்றும் பொதுப்பணித்துறையினர் பாசனத்துக்காக தண்ணீரை திறந்து விட்டனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 101.06 அடியாக உள்ளது. வரத்து 125 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 72.73 மி.கன அடி.
கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் இன்று 4- ம் நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியாறு 28.6, தேக்கடி 12.6, கூடலூர் 9.8, உத்தமபாளையம் 11, சண்முகாநதி அணை 11.6, போடி 10, வைகை அணை 29, மஞ்சளாறு 21, சோத்துப்பாறை 28, பெரியகுளம் 15.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.