தேனி மாவட்டத்தில் கன மழை வைகை அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு
- தொடர் மழை காரணமாக வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.29 அடியாக உள்ளது. நேற்று 1076 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1510 கன அடியாக அதிகரித்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரும் நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் தேவதா னப்பட்டி, வடுகபட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று முகூர்த்தநாள் என்பதால் விசேஷங்களுக்கு சென்று திரும்பியவர்களும் குறித்த நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 65.29 அடியாக உள்ளது. நேற்று 1076 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1510 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1519 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4695 மி.கன அடி.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 40.40 அடியாக உள்ளது. வரத்து 1481 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 7234 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி. வரத்து 100 கன அடி. திறப்பு 40 கன அடி. இருப்பு 433.28 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடி. வரத்து 203 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 100 மி. கன அடி.
ஆண்டிபட்டி 18.2, அரண்மனைபுதூர் 12.8, பெரியகுளம் 29, மஞ்சளாறு 17, சோத்துப்பாறை 28, வைகை அணை 8.6, போடி 15.2, உத்தமபாளையம் 1.6, கூடலூர் 3.4, பெரியாறு 16, தேக்கடி 17.2, சண்முகநாதி அணை 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.