உள்ளூர் செய்திகள் (District)

கனமழை எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் விவரம்

Published On 2024-10-15 14:32 GMT   |   Update On 2024-10-15 16:06 GMT
  • சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை.
  • ராணிப்பேட்டையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து இன்று காலை தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அந்த பகுதியில் நிலவி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அதைத்தொடர்ந்து வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News