தீபாவளியை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு அதிக படியான வாகனங்கள் படையெடுப்பு: விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் 8 வழிகளும் திறப்பு
- பயணத்தை திட்டமிட்டு அரசு பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து இருந்த னர்.
- விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரம்:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதையடுத்து தீபாவளியை கொண்டாட சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே தங்களது பயணத்தை திட்டமிட்டு அரசு பஸ்களி லும், ஆம்னி பஸ்களிலும் முன்பதிவு செய்து இருந்த னர்.
நேற்று மாலை அரசு பஸ், ஆம்னி பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள் என தங்களுக்கு விருப்பமான வாகனங்களில் சென்னை யில் இருந்து புறப்பட்டு விக்கிரவாண்டி வழியாக தென் மாவட்டங்களை நோக்கி சென்றனர். இதனால் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்ல ஆரம்பித்தன. விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் வாகன நெரிசல் ஏற்பட்டது. தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு கூடுதலாக இரு வழிகள் திறந்து 8 வழிகளில் வாக னங்கள் அனுப்பி வைக்கப் பட்டது. நேற்று மாலையில் இருந்து இரவு 7.30 மணி வரை 35 ஆயிரம் வாகனங்க ளும், நள்ளிரவு கடந்து அதிகாலை 8 மணி வரை 55 ஆயிரம் வாகனங்களும் டோல் பிளாசாவை கடந்து சென்றன. மேலும் அசம்பா விதம் நடக்காத வகையில் போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.