உள்ளூர் செய்திகள்

 கோப்புபடம்

வீடுகளின் மாடிகளில் மூலிகை தோட்டம்

Published On 2022-06-10 05:32 GMT   |   Update On 2022-06-10 05:32 GMT
  • மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது.
  • வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

உடுமலை,

உடுமலை நகரில் சிலர் தங்களது குடியிருப்பு ஒட்டிய நிலப்பகுதிகளில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். அங்கு மூலிகைச்செடிகள், குரோட்டன்ஸ் வகைகள், துளசி உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை வளர்க்கின்றனர்.

அதேநேரம் இடவசதி இல்லாத சிலர் மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.அவ்வகையில், ஐஸ்வர்யா நகரில் சிலர் வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி மற்றும் மூலிகைத்தோட்டம் அமைத்துள்ளனர். வீட்டிற்கு தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள், பழங்களை இயற்கை விவசாய முறையில் விளைவித்துக்கொள்கின்றனர்.

இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:-

மாடித்தோட்டத்தை பராமரிப்பதில் புத்துணர்வு கிடைக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகளையும், தோட்டத்தை பராமரிக்கச்செய்வதன் வாயிலாகஅவர்களும் உற்சாகம் அடைகின்றனர். தவிர மருத்துவ குணம் கொண்ட மூலிகைச்செடிகள் வளர்ப்பில் அதன் முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, உரமிடுவது போன்ற பணிகள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி விடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News