கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
- கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- கல்வி நிலையங்களில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பு முறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சிலையும் நீயே.. சிற்பியும் நீயே.. எனும் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரை யாடி ஆலோசனை களை வழங்கி கூறியதாவது:-
அரசு பள்ளியோ, தனியார் பள்ளியோ, எங்கு படித்தாலும் நன்றாக, கடுமையாக உழைத்தால், இந்தியாவின் தலை சிறந்த கல்விநிலையங்களில் தங்களது உயர்கல்வி படிப்பினை பயின்று வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரலாம். அது போன்ற கல்வி நிலையங்களில் பயில்வதற்கான நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பு முறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இன்றைய சூழ்நிலையில் பிளஸ்-2 வகுப்பு நிறைவு செய்துள்ள மாணவர்கள் தங்களுடைய தகுதி, தனித்திறன், பொது அறிவு உள்ளிட்ட ஆளுமைப்பண்புகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே உயர்கல்வி பயிலும் போதே பணிவாய்ப்பினை உறுதி செய்து கொள்ள முடியும். பொறியியல் பட்டப் படிப்பினை தேர்வு செய்து படிப்பதன் மூலமாக பகுப்பாய்வுத் திறன் மற்றும் நேர்காணல் உள்ளிட்ட அத்தியாவசிய திறன்களை வளர்த்துக் கொள்ளலாம் .எந்த தொழில் சார் படிப்பினை தேர்ந்தெடுத்தாலும் அடிப்படை கணினி குறியீட்டு முறை பற்றிய புரிதல் மிக அவசியம். ஏதேனும் ஒரு கணினி மொழியில் புலமை பெற்றுருத்தல் அவசியம்
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, இந்தாண்டு பிளஸ்-2 வகுப்பை நிறைவு செய்த சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில் ஆன்லைன் அப்ஜெக்ட்டிவ் டெஸ்ட்-இல் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும் அதிக எண்ணிக்கை யிலான மாணவர்களை ஊக்கப்படுத்தி எழுதச் செய்த கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி, விக்கிரமசிங்கபுரம் கேம்ப்ரிட்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு தலா ரூபாய் 2,500/- மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டு தலின்படியும் அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத்தலைவர் எம்.ஏ.நீலகண்டன் ஆலோசனை யின் படியும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.தாளமுத்து, எஸ்.சசிரேகா, பி.அன்ன ராஜ், எஸ்.சுபாஷ், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.