கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
- வெற்றிக்கு வழி எனும் தலைப்பில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி மாணவர்களிடையே கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கினார்.
- பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் பொது அறிவு உள்ளிட்ட ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பட்டப்படிப்பு பயிலும் போதே பணி வாய்ப்பினை உறுதி செய்து கொள்ள முடியும்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் வெற்றிக்கு வழி உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் வெற்றிக்கு வழி எனும் தலைப்பில் கல்வி ஆலோ சகர் ஜெயப்பிரகாஷ் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்க ளிடையே கலந்துரையாடி ஆலோசனைகளை வழங்கி னார்.
பகுப்பாய்வுத் திறன்
அப்போது சிறப்பு விருந்தினர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:-
இன்றைய சூழ்நிலையில் பிளஸ்-2 வகுப்பு நிறைவு செய்துள்ள மாணவர்கள் தங்களுடைய தகுதி, தனித்திறன், பொது அறிவு உள்ளிட்ட ஆளுமைப் பண்பு களை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பட்டப்படிப்பு பயிலும் போதே பணி வாய்ப்பினை உறுதி செய்து கொள்ள முடியும்.
படிக்கும் போதே கணிப்பொறி மொழி சார்ந்த திறன்சார் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே வரும் காலங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய முடியும். பொறியியல் பட்டப்படிப்பினை தேர்வு செய்து படிப்பதன் மூலமாக பகுப்பாய்வுத் திறன் மற்றும் நேர்காணல் உள்ளிட்ட அத்தியாவசிய திறன்களை வளர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பிளஸ்-2 முடித்துள்ள மற்றும் பிளஸ்-2 சேர்ந்துள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர். அருணாச்சலம், இயக்குனர் எஸ். சண்முகவேல், முதல்வர் கே. காளிதாச முருகவேல் ஆகியோர்களின் ஆலோசனையின்படியும் அறிவியல் மற்றும் மானுட வியல் துறைத்தலைவர் நீலகண்டன் வழிகாட்டுதலின் படியும் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர்கள் பாஸித்தா பர்வீன், ராமசுப்பு, ராஜ் குமார் மற்றும் சிவக்குமார் மற்றும் கல்லூரிப் பேராசி ரியர்கள் செய்திருந்தனர்.