உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் அறிவிப்பு

Published On 2022-06-28 06:58 GMT   |   Update On 2022-06-28 06:58 GMT
  • கோரிக்கையை வலியுறுத்தி மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் விடுமுறையில் 48 மணி நேர அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • தி.மு.க. அரசின் தோ்தல் வாக்குறுதியான சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

திருப்பூர் :

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் (எஸ்.எஸ்.டி.ஏ) மண்டல மாநாடு அவிநாசியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில பொதுச் செயலாளா் ராபா்ட் தலைமை வகித்தாா்.மாநிலத் தலைவா் ரெக்ஸ் ஆனந்தகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் தி.மு.க. அரசின் தோ்தல் வாக்குறுதியான சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக முதல்வரின் கவனத்தை ஈா்த்திட இடைநிலை ஆசிரியா்கள், கோரிக்கையை வலியுறுத்தி மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் செப்டம்பா் முதல் பருவ விடுமுறையில் 48 மணி நேர அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News