உள்ளூர் செய்திகள்

இப்தார் நோன்பு நிகழ்ச்சியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்த காட்சி.

செஞ்சியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

Published On 2023-04-08 09:27 GMT   |   Update On 2023-04-08 10:01 GMT
  • செஞ்சி சத்திர தெருவில் உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லீம்களின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
  • சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்:

செஞ்சி சத்திர தெருவில் உள்ள பெரிய பள்ளி வாசலில் முஸ்லீம்களின் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சையத் அன்வர் தலைமை தாங்கினார். செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் அப்துல் மஜீத் மற்றும் அனைத்து பள்ளிவாசல் பட்டேல்கள், முத்தவல்லிகள் முன்னிலை வகித்தனர். ஆபீஸ் ஜாஹீர் ஆலம் இறைவணக்கம் செய்தார். சித்திக் ஹஸ்ரத் மன்பா வரவேற்றார். முகமது அஷ்ரப் தொகுத்து வழங்கி னார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ,பேரூராட்சி கவுன்சிலர் சங்கர் ,தி.மு.க. நகர செயலாளர் காஜா நசீர், ஆதில் பாஷா, அம்ஜத் பாண்டே மாவட்ட பிரதிநிதி ஜெ.எஸ்.சர்தார், தொண்டர் அணி பாஷா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்றனர். சையத் சாதுல்லா நன்றி கூறினார்.

Tags:    

Similar News