உள்ளூர் செய்திகள் (District)

இல்லம்தேடி காய்கனி விற்பனை அங்காடியை மேயர் ராமச்சந்திரன் பார்வையிட்ட காட்சி.

சேலம் மாநகராட்சி பகுதியில் இல்லம்தேடி காய்கனி விற்பனை அங்காடி

Published On 2022-12-10 09:31 GMT   |   Update On 2022-12-10 09:31 GMT
  • இல்லம் தேடிச்சென்று பண்னை காய்கறிகள் விற்பனை செய்திடும் வகையில் நடமாடும் காய்கனி விற்பனை அங்காடி முதல் -அமைச்சரால் கடந்த 7-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி பகுதிக்கு 10 வார்டுகளுக்கு 1 நடமாடும் காய்கனி வாகனம் என 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மேயர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்:

தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நுகர்வோர்களுக்கு இல்லம் தேடிச்சென்று பண்னை காய்கறிகள் விற்பனை செய்திடும் வகையில் நடமாடும் காய்கனி விற்பனை அங்காடி முதல் -அமைச்சரால் கடந்த 7-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி பகுதிக்கு 10 வார்டுகளுக்கு 1 நடமாடும் காய்கனி வாகனம் என 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மேயர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் காய்கறிகளின் தரம் மற்றும் விற்பனை விலை குறித்தும் கேட்டறிந்தார்.

இல்லம் தேடி வரும் நடமாடும் காய்கனி அங்காடியில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட கடலை எண்ணை, நல்லெண்ணை, தேங்காய் எண்ணை போன்ற வீட்டு உபயோகத்திற்கான பொருட்களும் விற்பனை செய்யப்படும். நடமாடும் காய்கனி வாகனத்தில் நுகர்வோருக்கு உழவர் சந்தை விலையிலேயே காய்கறிகள் கிடைக்கும். எனவே பொதுமக்கள் தரமான காய்கறிகளை மலிவான விலையில் பெற்று பயன்பெறுமாறு மேயர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சாரதாதேவி, இணை இயக்குநர் வேளாண்மை சிங்காரம், துணை இயக்குநர் ( வேளாண் வணிகம் ) பாலசுப்பிரமணியன், விற்பனை குழு முதுநிலை செயலாளர் கண்ணன், தாதகாப்பட்டி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மகேந்திரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவகுமார், தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News