உடன்குடியில் மகளிர் சுய உதவி குழுவினரின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு பெண்கள் பாராட்டு
- அரசு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த போது பெண்கள் சிலர் அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்து கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கூறினர்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உடன்குடி மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்யாது ஏன்? மீண்டும் அவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
உடன்குடி:
உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் கடன் பெற்றதாக வும், அதில் ஒரு சில குழுக்க ளுக்கு தள்ளுபடி செய்ய வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உடன்குடி யில் நடந்த ஒரு அரசு விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வந்தார். அரசு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த போது பெண்கள் சிலர் அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்து கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கூறினர். மனுவை வாங்கி படித்த அமைச்சர் உடனடியாக செல்போன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உடன்குடி மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்யாது ஏன்? மீண்டும் அவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
கோரிக்கை மனு கொடு த்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அமைச்சர் பேசி யதை பார்த்து, கோரி க்கை மனு கொடுத்த பெ ண்கள் அமைச்சருக்கு பாரா ட்டும், நன்றியும் தெரி வித்த னர். அப்போது கட்சி நிர்வா கிகள் மற்றும் அரசு அதி காரிகள் உடன் இருந்தனர்.