உள்ளூர் செய்திகள்

கோவையில் நள்ளிரவில் குடிமகன்கள் தொல்லை

Published On 2022-07-26 09:59 GMT   |   Update On 2022-07-26 09:59 GMT
  • குடிமகன்கள் மிரட்டலால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
  • இரவில் கூடி நின்று தகராறு செய்கிறார்கள்.

 குனியமுத்தூர்,

கோவையில் காந்திபுரம், டவுன் ஹால், உக்கடம் போன்ற பகுதிகளில் 2 பேர், மூன்று பேராக சேர்ந்து நின்று குடிபோதையில் பேசிக் கொண்டிருக்கின்றனர். நள்ளிரவு சினிமா முடிந்து குடும்பத்துடன் சாலை வழியாக செல்பவர்கள் இவர்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர்.

கடந்த வாரம் இரவு ஒரு மணிக்கு இரவு சினிமா காட்சி முடிந்து சென்ற ஒரு குடும்பத்தினரை, கோவை டவுன்ஹால்சிக்னல் போலீஸ் செக்போஸ்ட் அருகே மூன்று குடிமகன்கள் வழிமறித்து, பிரச்சினை செய்துள்ளனர்.

இதுபோன்ற சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக டாஸ்மாக் கடை இரவு 10 மணிக்கு எல்லாம் மூடி விடுவார் . ஆனால் குடிமகன்கள் 10 மணிக்கு முன்பாக ஸ்டாக் வாங்கி வைத்து விடுகின்றனர். பின்னர் இரவு முழுவதும் குடிபோதையில் சுற்றிக் கொள்வது வழக்கமாகி விட்டது.

காவல்துறையினர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத இடத்தில் நிற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையின் அனைத்து பிரதான சாலைகளிலும் போலீசார் நள்ளிரவில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் நோக்கமாகும்.

Tags:    

Similar News