கடலூர் மாநகராட்சியில் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1.35 கோடியில் எந்திரங்கள் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
- கடலூர் மாநகராட்சியில் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.1.35 கோடியில் எந்திரங்கள் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
- 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெருவிளக்கு பராமரிப்பு பணிகளுக்கு 15 -வது நிதி குழு மானியம் திட்ட நிதி பொக்லைன் எந்திரம், தெரு மின்விளக்கு பொருத்தும் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ரூ. 1 கோடி 35 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன. இதன் தொடக்க விழா கடலூர் மாநகராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நாவேந்திரன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.