- தமிழக பகுதிகளின் மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- விவசாயி பணிகள் பாதிப்படைந்து வருவதோடு, விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கடலூர்:
தமிழக பகுதிகளின் மேல் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்திக உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் திருப்பாதிரிப்புலியூர் முதுநகர் செம்மண்டலம், காராமணிக் குப்பம், திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, தொழுதூர், வேப்பூர், கீழச்செருவாய், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ,காட்டுமன்னார்கோயில் அண்ணாமலைநகர், பண்ருட்டி, சிதம்பரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது காண முடிந்தது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயி பணிகள் பாதிப்படைந்து வருவதோடு, விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு தொழுதூர் - 34.0, வேப்பூர் - 27.0, கீழச்செருவாய் - 25.0, லால்பேட்டை - 18.0, காட்டுமயிலூர் - 15.0,பரங்கிப்பேட்டை - 14.4, புவனகிரி - 13.0, ஸ்ரீமுஷ்ணம் - 11.2, காட்டுமன்னார்கோயில் - 11.0, அண்ணாமலைநகர் - 10.0, பண்ருட்டி - 8.5, சிதம்பரம் - 7.4, கடலூர் - 5.8, கலெக்டர் அலுவலகம் - 5.4, கொத்தவாச்சேரி - 5.0, மீ-மாத்தூர் - 5.0, எஸ்ஆர்சி குடிதாங்கி - 3.75, வானமாதேவி - 3.0,ஆக மொத்தம் 222.45 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது .