தருமபுரியில்இலவச திருமணம் செய்ய விண்ணப்பிக்கலாம்
- தருமபுரி மாவட்டத்தில் அருகில் உள்ள முக்கிய கோவில்களில், அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.
- இரு வீட்டினரின் பெற்றோர், மணமக்கள், அவசியம் வர வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 25 மணமக்களுக்கு வரும் 23.2.2023 அன்று இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் அருகில் உள்ள முக்கிய கோவில்களில், அதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். அப்போது இரு வீட்டினரின் பெற்றோர், மணமக்கள், அவசியம் வர வேண்டும்.
விண்ணப்பத்தில் மணமகள், மணமகன் புகைப்படம், பிறந்த தேதி, வயது, தொழில், ஜாதி உள்ளிட்ட இருவர் பற்றிய முழு விபரத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும். இருவரும் இந்துவாக இருப்பதோடு, முதல் திருமணமாகவும் இருக்க வேண்டும். திருமணத்தின்போது அனைத்து ஆவண அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
மணமகள் அல்லது மணமகன் பெற்றோருடன் கூடிய புகைப்படம் திருமண படிவத்தில் கண்டிப்பாக இணைக்க வேண்டும். திருமணத்துக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணம், எக்காரணம் கொண்டும் திருப்பி தர இயலாது.
அதேபோல் திருமணம் தொடர்பான விபரம், நகல்கள், மணமக்கள் தவிர வேறு யாருக்கும், தனிப்பட்ட முறையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம், வேறு எந்த சட்டப்பிரிவின் மூலமும் வழங்கப்படாது என்பன உள்ளிட்ட 13 நிபந்தனைகளுடன் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும்.
மேலும் மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.