உள்ளூர் செய்திகள்

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்தபடம்.

திண்டிவனத்தில் கோர்ட்டை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-07-24 08:50 GMT   |   Update On 2023-07-24 08:50 GMT
  • கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும்.
  • படங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோர்ட்டில் வக்கீல்கள், தங்களின் பணிகளை புறக்கணித்து போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும். மற்ற படங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். இதனை கண்டி த்தும் கோர்ட்டுகளில் அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதிக்க வலியுறுத்தியும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்தும் திண்டி வனம் வக்கீல்கள் இன்று பணி களை புறக்கணித்தனர்.

கோர்ட்டு வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென வக்கீல்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்தை விட்டு வெளியில் வந்த னர். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷ ங்கள் எழுப்பினர்.

அங்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த மயிலம் போலீசார், வக்கீ ல்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடைபெ ற்றது. இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீ சார் வரவழைக்கப்ப ட்டு சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்களை அப்புறப்ப டுத்தினர்.

வக்கீல்கள் செய்த திடீர் சாலைமறியலால் சென்னை - திருச்சி நெடுஞ்சா லையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

Tags:    

Similar News