உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

கள்ளக்குறிச்சியில் மக்கள் குறை தீர் கூட்டத்தில் 557 மனுக்கள் பெறப்பட்டது

Published On 2023-04-18 05:05 GMT   |   Update On 2023-04-18 06:31 GMT
  • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
  • போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் போலீஸ் துறை தொடர்பான மனுக்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 557 மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண் இணை இயக்குநர் கருணாநிதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News