உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சியில் : தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

Published On 2023-11-06 05:27 GMT   |   Update On 2023-11-06 05:40 GMT
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி:

தீபாவளி பண்டிகையை யொட்டி கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை சார்பில் பஸ் நிலையம் வெளிப்பகுதியிலும், மணிக்கூண்டு பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து தீபாவளி பண்டிகையை யொட்டி மளிகை பொருட்கள், பட்டாசுகள், துணிகள் ஆகியவற்றை வாங்க வரும் பொது மக்கள் நகர பகுதியில் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், இவர்கள் சாலைகளில் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே துருகம் சாலை, சேலம் மெயின் ரோடு, கச்சிராயபாளையம் சாலை, சங்கராபுரம் சாலை ஆகிய 4 சாலைகளிலும் தற்காலிக வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஏற்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாறு அமைப்பதன் மூலம் அங்கு வாகனங்களை பொதுமக்கள் நிறுத்திவிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வந்து தங்களது வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என கூறினார். தொடர்ந்து குற்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்போது கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் உள்ளிட்ட போலீசார் பலரும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News