உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் மனு அளிக்க வந்த சுகந்தி. உள்படம்: மலேசியாவில் இறந்த தொழிலாளி செந்தில்குமார்

மலேசியாவில் இறந்த தொழிலாளி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்; மனைவி கண்ணீர் மல்க மனு

Published On 2023-05-29 10:07 GMT   |   Update On 2023-05-29 10:07 GMT
  • கடந்த 8 மாதத்திற்கு முன்பு கூலி தொழிலாளி வேலைக்காக மலேசியா நாட்டிற்கு சென்றார்.
  • பட்டப்படிப்பு முடித்துள்ள எனக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த வாராந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் திருமங்கலக்கோட்டை கீழையூர் மேலக்காலணியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சுகந்தி (வயது 32) என்பவர் தனது 2 கைக்குழந்தையுடன் வந்து கண்ணீர் மல்க அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் செந்தில்குமார் கடந்த 8 மாதத்திற்கு முன்பு கூலித் தொழிலாளி வேலைக்காக மலேசியா நாட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் செந்தில்குமார் இறந்து விட்டதாக எங்களுக்கு மலேசியாவில் இருந்து போன் வந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

உடனடியாக அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும். 2 கைக்குழந்தைகளுடன் நான் எப்படி வாழ்வேன் என்று தெரியவில்லை.

பட்டப்படிப்பு முடித்துள்ள எனக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். எனது ஏழ்மை நிலையை உணர்ந்து எனக்கு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News