பண்ருட்டியில்:வேலை வாங்கித் தருவதாக ஆட்டோ டிரைவரிடம் ரூ.50 ஆயிரம் மோசடிமர்மஆசாமிக்குபோலீஸ்வலைவீச்சு
கடலூர்
பண்ருட்டி அடுத்த விலங்கல் பட்டை சேர்ந்தவர் பற்குணன் (வயது 40), ஆட்டோ டிரைவர்,இவரது போனுக்கு நேற்று ஒரு போன் வந்தது. போனில் பேசிய நபர் பண்ருட்டி யூனியன் அலுவலகத்தில் அரசு டிரைவர் வேலைக்கு உனக்குஆர்டர் வந்துள்ளது.இந்த வேலையில் சேர 3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். நாளைக்கு காலை 10 மணிக்கு யூனியன் அலுவலகத்திற்கு பணத்துடன் வரவும் என்று கூறியுள் ளார் .
போனில் பேசிய நபர் கூறியவாறு ஆட்டோ டிரைவர் பற்க்குணன் ரூ 50 ஆயிரம் பணத்துடன் பண்ருட்டி யூனியன் ஆபீசுக்கு நேற்று காலை வந்தார்.சிறிது நேரத்தில் போனில் பேசிய அந்த டிப் டாப் ஆசாமி பஸ்சிலிருந்து இறங்கி வந்துள்ளார். அவருக்காகயூனியன் அலுவலகம் வாசலிலே காத்திருந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் டிப்டாப் ஆசாமிடம் முதல் தவணையாக ரூ50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட டிப் டாப் ஆசாமி இங்கேயே இரு. உனக்கு ஆர்டர் எடுத்துக் கொண்டு ஜெயசீலன் என்பவர் வருவார் எனக்கூறி அங்கிருந்து பணத்துடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் பற்க்குணன் வேலைக்கான ஆர்டர் வரும் என்று நம்பி அங்கேயே காத்திருந்திருந்தார். நேரமாக, நேரமாக டிப்டாப் சாமி சொன்னது போலயாரும்வரவில்லை நாம் ஏமாந்து விட்டோம் என நினைத்து டிப்டாப் ஆசாமிக்கு போன் செய்துள்ளார்.
டிப்டாப் ஆசாமியின் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் பற்குணன் இதுகுறித்து யூனியன் அலுவலகத்தில் உள்ளவரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த பற்குணன் இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.