உள்ளூர் செய்திகள்

சேலத்தில் வெண்டைக்காய் கிலோ ரூ.100 ஆக எகிறியது

Published On 2023-03-10 09:37 GMT   |   Update On 2023-03-10 09:37 GMT
  • ஒரு வாரத்துக்கு முன் கிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கு விற்றது.
  • அதே வேளையில் வெளி மார்க்கெட்டில் வெண்டைக் காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சேலம்:

சேலம் மாவட்டம் பனம ரத்துப்பட்டி வட்டாரத்தில் பாரப்பட்டி, வாணியம்பாடி, கம்மாளப்பட்டி, திப்பம்பட்டி, நாழிக்கல்பட்டி உள்ளிட்ட இடங்களில் 150 ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் காய்களை சேலம் உழவர் சந்தையில் விவசாயிகள் விற்கின்றனர். குறிப்பாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ஒரு வாரத்துக்கு முன் கிலோ வெண்டைக்காய் ரூ.45-க்கு விற்றது. அப்போது வெளி மார்க்கெட்டுக்கள், மளிகை கடைகள், வணிக வளா கத்தில் உள்ள கடைகளில் 75 ரூபாய்க்கு விற்றது.

இந்த நிலையில் சில நாட்களாக வெண்டைக் காய்க்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தையில் ஒரு கிலோ 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் வெளி மார்க்கெட்டில் வெண்டைக் காய் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இது குறித்து பன மரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் குமரவேல் கூறுகையில், பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து தட்டுப்பாட்டால் வெண்டைக்காய் விலை உயர்ந்துள்ளது, என்றார்.

Tags:    

Similar News