தஞ்சையில், கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- நீட் , கியூட் போன்ற நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
- உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்களை திரும்ப பெற வேண்டும்.
தஞ்சாவூர்:
நீட் , கியூட் போன்ற நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் ,
தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வேண்டும். நிறுத்தப்பட்ட கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டனர்.
பின்னர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு இந்திய மாணவர் சங்கம் கிளை நிர்வாகி தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் முன்னிலை வைத்தார். கிளை நிர்வாகி ஜெகன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் சந்துரு , கிளை நிர்வாகிகள் எடிசன் ராஜதுரை, மூர்த்தி, நித்திஷ், சரண், ஹரிஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.