வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம் - 12,13-ந்தேதி நடக்கிறது
- நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது.
- வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருப்பூர்:
தேர்தல் கமிஷன் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல்திருத்தப்பணி நடைபெறுகிறது.முன்னதாக வரைவு பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்த பணிகள் நடைபெறும். ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது. வருகிற 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.வரும் 2023 ஜனவரி 1-ந் தேதி, 18 வயது பூர்த்தி அடைந்தோர், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் பகுதி தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம்.
https://www.nvsp.in என்கிற வாக்காளர் சேவை போர்ட்டல்,voter Helplineஎனும் செல்போன் செயலி மூலமாகவும் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம்.
மேலும் தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சனி, ஞாயிறு தினங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி 18 வயது பூர்த்தியானோர் வாக்காளர் பட்டியலில் தவறாமல் தங்கள் பெயர்களை சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலா ம் என திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.