கடந்த 4 மாதத்தில் தருமபுரி, ஓசூர் பகுதிகளில் ரெயிலில் அடிபட்டு 11 பேர் பலி
- ெரயில்வே தண்டவாளத்தை மிக கவனத்துடன் கடக்க வேண்டும்.
- லெவல் கிராஸ் பகுதியில் செல்லும்போது கவனத்துடன் செல்ல வேண்டும்.
தருமபுரி,ெ
ரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம், தருமபுரி, ஓசூர், காட்பாடி, ஜோலார்பேட்டை ெரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4 மாதத்தில் 104 பேர் பலியாகியுள்ள னர்.
அதில், சேலம் ெரயில்வே உட்கோட்ட பகுதியில் உள்ள சேலத்தில் 35 பேரும், தருமபுரியில் 5 பேரும், ஜோலார்பேட்டையில் 38 பேரும், காட்பாடியில் 20 பேரும், ஓசூரில் 6 பேரும் என மொத்தம் 104 பேர் ெரயிலில் சிக்கி பலியாகியுள்ளனர்.
விருத்தாசலம், ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ெரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இம்மார்க்கத்தில், ெரயில்வே தண்டவாளத்தை ஒட்டி குடியிருப்புகள் அதிகளவு உள்ளன.
இப்பகுதி மக்கள் தினமும் காலையில், தண்டவாள பகுதிக்கு வந்து, காலைக்கடனை கழித்து வருகின்றனர். இதனால் பலர் ெரயிலில் அடிபட்டு இறக்கின்றனர்.
இந்த மார்க்கத்தில் குறைந்த அளவிலேயே ெரயில்கள் செல்லும் நிலையில் இத்தகையை நிலை ஏற்பட்டு இருக்கிறது.
கட்டுப்படுத்த அவ்வப்போது, ெரயில்வே படையினர், ெரயில்வே தண்டவாளத் அசுத்தம் செய்வோரை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் உட்கோட்ட பகுதியில் உள்ள லெவல் கிராசிங், தண்டவாள பகுதியில் உள்ள கிராம மக்களிடையே ெரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ெரயில்வே தண்டவாளத்தை மிக கவனத்துடன் கடக்க வேண்டும். போதையில் தண்டவாள பகுதிக்கு செல்லக்கூடாது. லெவல் கிராஸ் பகுதியில் செல்லும்போது கவனத்துடன் செல்ல வேண்டும்.
ெரயிலில் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக ெரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், தண்டவாளத்தை ஒட்டிய கிராம மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 4 மாதத்தில் மட்டும் 104 பேர் ெரயிலில் அடிபட்டு பலியாகியுள்ளனர்.
இதில் 15 பேர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. தற்போது ெரயிலில் அடிபட்டு இறப்போரின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிராம மக்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட்டு லெவல் கிராஸ், தண்டவாள பகுதியில் உள்ள வருகிறது. படிக்கட்டில் பயணம் செய்வோர் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகிறோம் என்றனர்.