உள்ளூர் செய்திகள்
தேத்தாக்குடியில், கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்த பெண்கள்
- 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் ஊர்வலமாக வந்து கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
- கன்னி பெண்கள் சேகரித்து வைத்த விநாயகரை ஆற்றில் விட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடியில் மார்கழி மாதம் முழுவதும் பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு அறுகம்புல் சாண விநாயகர் வைப்பது வழக்கம்.
திருமணம் ஆகாத பெண்கள் மார்கழி மாதம் பிடித்து வைத்த பிள்ளையாரை ஆற்றில் கரைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
இதன் அடிப்படையில் காணும் பொங்கலை யொட்டி செல்லியம்மன் கோவில் வளாகத்தில் 6 முதல் 60 வயது வரையுள்ள பெண்கள் ஊர்வலமாக வந்து உப்பாற்றின் அருகே கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
பின், கன்னி பெண்கள் சேகரித்து வைத்த விநாயகரை ஆற்றில் விட்டனர். நிகழ்ச்சிக்கு பல ஊர்களில் இருந்து பெண்கள் வந்து நட்பை பரிமாறி கொண்டனர்.