உள்ளூர் செய்திகள் (District)

திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை மைய கட்டிடத்தை அமைச்சர் சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். 

திருவாரூரில், விரைவில் செவிலியர் கல்லூரி தொடங்கப்படும்- அமைச்சர் பேட்டி

Published On 2023-01-27 10:01 GMT   |   Update On 2023-01-27 10:01 GMT
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.
  • தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.

திருவாரூர்:

திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை மைய கட்டிடம், மருத்துவ மாணவர் மன்றம் நவீன சமையலறை கூடம் ஆகியவைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்விற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது, பான் மசாலா, குட்காவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிப்படை பணிகள் கூட நடைபெறவில்லை.

இப்போது அடிப்படை பணிகளை தொடங்கினாலும் கட்டுமான பணிகளை தொடங்க 6 மாதம் ஆகும்.

மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கிய அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் தொடங்கப்பட்ட பிற மாநிலங்களில் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதற்காக தொடர்ந்து ஒன்றிய அமைச்சரிடம் 10 முறை மனு அளித்துள்ளோம்.

மாவட்டத்திற்கு ஒரு அரசு செவிலியர் கல்லூரி என்ற கொள்கை முடிவின்படி திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் கல்லூரி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் மதிவாணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News