உள்ளூர் செய்திகள்

உடுமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2023-01-14 10:20 GMT   |   Update On 2023-01-14 10:20 GMT
  • போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
  • தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

உடுமலை :

உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்துபேரணியைதுவக்கிவைத்தார். உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, உடுமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் உடுமலை ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கம் ,உடுமலை இருசக்கரம் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் சங்கம் ,உடுமலை புதிய இருசக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர். பேரணி உடுமலை தளி ரோடு வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட சென்று பைபாஸ் ரோடு, ராஜேந்திரா சாலை, ராமசாமி நகர் வழியாக சென்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News