உள்ளூர் செய்திகள்

பாலாலய திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

ராமநாதசாமி கோவிலில் பாலாலயம் தொடக்கம்

Published On 2022-11-14 09:54 GMT   |   Update On 2022-11-14 09:54 GMT
  • கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது.
  • சிறப்பு யாகங்களில் பக்தர்கள் கலந்து ெகாண்டு தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம்:

நாச்சியார்கோவில் அருகே உள்ள திருநறையூர் கிராமத்தில் அமைந்துள்ள பர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளார்.

அதேபோல ராமபிராமம் கோவிலில் வழிபாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்புடைய கோவிலின் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ளது.

அதற்கான பாலாலயம் எனப்படும் திருப்பணி துவக்க விழா, இன்று காலை சிறப்பு யாகங்களுடன் தொடங்கியது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News